வவுனிக்குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம், மாங்குளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு -வவுனிக்குளம் குளத்தில் மீன்பிடிக்க சென்ற இளைஞன் ஒருவர், படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞனை தேடி கிராம மக்கள், பொலிசார், இராணுவத்தினர் என பல்வேறு தரப்பினராலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு, மாங்குளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
24 அகவையுடைய 5ம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த விஜயரட்ணம் நிலவன் எனும் இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்