மாந்தை – பரப்புக்கடந்தான் கிழக்கு பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் இறந்த நிலையில் காட்டு யானை ஒன்று இன்று காலை கிராம மக்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, கிராம மக்கள் உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த யானையின் உடலை மீட்டனர்.
உயிரிழந்த குறித்த யானை சுமார் 35 வயதுடைய பெண் யானை என தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட மாகாண வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்திய அதிகாரி உயிரிழந்த யானையின் உடலத்தை மீட்டு சடல பரிசோதனைகளை மேற்கொண்டார்.
குறித்த யானை சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்சார இணைப்பில் அகப்பட்டு மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.