பொடிமெனிக்கே புகையிரதத்தில் மோதி இளைஞர் பலி

பொடிமெனிக்கே புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே புகையிரதத்தில் தலவாக்கலை, சென்.கிளயார் மற்றும் சென். அன்ட்ரூஸ் ஆகிய இடங்களுக்கு இடையில் இன்று (15) பிற்பகல் குறித்த இளைஞன் இவ்வாறு மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகலை சென். அன்ட்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ஆர். மோகனசுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவாறு ரயில் பாதையில் பயணித்த போது விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த உயிரிழந்த இளைஞரின் சடலம் கொட்டகலை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தலவாக்கலை மற்றும் திம்புளை – பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *