இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் தூதரக அதிகாரிகள் குழு இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நிலையில், யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார்.
இதேவேளை, யாழ்.பொது நூலகத்தினுள் உள்ள ‘இந்தியன் சென்ரர்’ பகுதியையும் சீன தூதுவர் பார்வையிட்டார்.
மேலும், அங்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடி, யாழ். நூலகத்திற்கு உதவிகளையும் வழங்கியிருந்தார்.
