முழங்காவில் எபிநேசர் தும்பு தொழிற்சாலைக்கான மேம்பாட்டுக்கு உதவி வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர் அமைப்பான உறங்கா விழிகள் அமைப்பின் ஊடாக குறித்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கயேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார், கொழும்பில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளாமைக்கான காரணம் தொடர்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாங்கள் 13ம் திருத்தத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த அழைப்பின் போது மனோகணேசன், மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொள்வதாகவும், எம்மையும் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
நாங்கள் 13ம் திருத்தம் தொடர்பில் ஏற்றுக்கொள்வதில்லை என்ற கொள்கையிலேயே உள்ளோம்.
எனினும் அன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில், 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பிலேயே பேச்சில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.