முல்லைத்தீவு மாவட்டத்திலும் மூன்றாவது டோஸ் (பைசர் )வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக தடுப்பு ஊசி ஏற்றும் பணிகளில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது
முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்கனவே பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, குறித்த பணிகள் நாளையும் நாளை மறுதினமும் தொடர்ந்து இடம்பெறும் என மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.