நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,677ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து இன்று மேலும் 335 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 இலட்சத்து 46 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது.
அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 இலட்சத்து 76 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களைத் தவிர்த்து, தற்பொழுது, 15 ஆயிரத்து 430 தொற்றாளர்கள், சிகிச்சை பெற்று வருகின்றனர்.