இலங்கைக்கு தெற்கே 900 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் எல்லையில் 250 கிலோ ஹெரோயினுடன் கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கப்பலையும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களையும் பார்வையிட பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண சென்றுள்ளார்.
கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் பணியகத்தினர், கடந்த சனிக்கிழமை முன்னெடுத்த சோதனையின் போது குறித்த ஹெரோயின் கப்பல் கைப்பற்றியிருந்ததுடன், அதிலிருந்த ஆறு பாகிஸ்தான் மற்றும் ஈரானிய பிரஜைகளையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.