மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக்கடந்தான் கிழக்கு பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் இறந்த நிலையில் காட்டு யானை ஒன்று கிராம மக்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
இதன் போது உயிரிழந்த யானை சுமார் 35 வயதுடைய பெண் யானை என தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட மாகாண வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்திய அதிகாரி உயிரிழந்த யானையின் உடலத்தை மீட்டு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.
Advertisement
இதன் போது குறித்த யானை சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்சார இணைப்பில் அகப்பட்டு மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.