சீன உர நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனத்திடமிருந்து உரம் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக அது குறித்து யாரெனும் ஒரு அமைச்சரோ அல்லது உயர் அதிகாரிகளோ நிச்சயமாக ஆராய்ந்து செயற்பட்டிருப்பார்கள்.
அவ்வாறான நபர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்தே இந்த பணத்தை அறவிட வேண்டுமென சுட்டிக்காட்டினார்.
மேலும், நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துவரும் நிலையில் இவ்வாறானதொரு தொகையை செலுத்துவதற்கு ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.