வடக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்ட சீன தூதுவர் பல இடங்களை இன்றைய தினம் பார்வையிட்டிருந்தார்.
அத்துடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்திற்கு வருகைதந்து ஆளுநருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
அதன்பின்னர் ஆளுநர் செயலகத்திற்கு அருகில் உள்ள ஒல்லாந்தர் கால கோட்டையை ஆளுநரும் சீன தூதுவரும் பார்வையிட்டனர்.
இன்றைய ஆளுநருடனான சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு சீன தூதுவர் கீசன்ஹொங்கினை கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்காமல் அங்கிருந்து விடைபெற்று சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
