தொண்டமனாறு கடற்கரையில் நேற்று புதன்கிழமை மனித எச்சங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
தொண்டமனாறு கடற்கரையில் மனித எச்சங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை நீதவான் கவனத்திற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, குறித்த மனித எச்சங்களை நீதவான் பார்வையிட்டார்.
குறித்த மனித எச்சங்கள் தற்போது மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.