இணைய வழிக்கல்வி தொடர்பில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு!

இணைய வழிக்கல்வி தொடர்பில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (15) காலை 10 மணிக்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் முத்துஐயன்கட்டு இடது கரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.

இக் கருத்தரங்கின் வளவாளராக முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன் கலந்துகொண்டார்.

தற்காலத்தில் இணையதளம் பிள்ளைகளின் அறிவு, திறமை மற்றும் ஆளுமை மனப்பாங்கை வளர்ப்பதற்கு காரணமாக இருந்த போதிலும் இணையவழி துஷ்பிரயோகங்களிற்கும் பிள்ளைகள் ஆளாகின்றனர்.

எனவே அதனைத் தடுப்பதற்காக பெற்றோர்களை அறிவுறுத்துவதற்காக குறித்த நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இக் கருத்தரங்கில் தரம் 6 தொடக்கம் 11வரையான ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்ட 40 பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இணைய வழிக்கற்கையின் நன்மை தீமைகள், கற்றல் செயற்பாடுகளில் மாணவர்களை கண்காணிக்கும் செயன்முறைகள், இணையத்தளத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளல் , இணையவழி துஷ்பிரயோகங்களில் இருந்து பிள்ளைகளை பாதுகாத்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது ஒட்டுசுட்டான் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி.சுதர்சன், பாடசாலை முதல்வர் இ.பாஸ்கரன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *