யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளையும் சீனாவுக்கு வழங்கும் எந்தவித நோக்கமும் எமது அரசாங்கத்திடம் இல்லை. ஆனால், முதலீடுகளின் போது சர்வதேச நாடுகளை தெரிவு செய்யும் வேளையில் தெரிவாவது சீன நிறுவனம் என்றால் அதனை எவரும் தவறான விதத்தில் விமர்சிக்கக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் முன்னெடுக்கும் உடன்படிக்கைகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் அதனை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார்.
கடந்த இரு ஆண்டுகளில் முப்படையினரின் செயல்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
யாழிற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம்! சீனத்தூதுவர் தெரிவிப்பு