கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று சிகிச்சை நிலையத்தின் கண்ணாடியை உடைத்துகொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையின் கொரோனா ஆண்கள் பிரிவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொற்றாளர் சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில், பிரதேசவாசிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தப்பிச்சென்றதை அருகில் இருந்த ஒருவர் கைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ள நிலையில் உடனடியாக பிடிக்கப்பட்டுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது மிக முக்கியமானதாகும்! அசேல குணவர்த்தன