யாழ்ப்பாணம், நவாலி – வடக்கு பகுதியில் நேற்றிரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்றிரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், வீட்டில் இருந்த பெண்ணை மிரட்டியதுடன், வீட்டின் அனைத்து ஜன்னல், கதவுகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
அத்துடன், வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பெற்றோல் ஊற்றி எரித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
