தமிழ் சமூகத்தினருடன் சீனா உறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதற்குப் பின்னால் எவ்வித இரகசியத் திட்டங்களும் இல்லை. யாழ்ப்பாணத் தீவுகளில் சீன நிறுவனத்தினால் தொடங்கப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்கள் கைவிடப்பட்டுவிட்;டதாக வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் சீனா அக்கறையோடு உள்ளது. அதேவேளை, வடக்கில் முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதிலும் சீனா ஆர்வமாக உள்ளது.
எனினும், சீனாவின் இந்த விருப்பங்களை சில தரப்புக்கள் சந்தேகத்துடன் நோக்குவது எமக்கு கவலை அளிக்கின்றது. சீனாவின் இந்த விருப்பத்திற்குப் பின்னால் எவ்வித இரகசிய நோக்கங்களும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
இதேவேளை, யாழ்ப்பாணத் தீவுகளில் சீன நிறுவனத்தால் தொடங்கப்படவுள்ள உத்தேச மீள்பிறப்பாக்க வலுசக்தி மின் உற்பத்தி திட்டங்களை அந்த நிறுவனங்கள் கைவிட்டுவிட்டன என அண்மையில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமில்லை: பாதுகாப்புச் செயலாளர்!