விமானப் படையினர் ஆறுபேர் உட்பட வடமாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனையில், நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிடலில் 02 பேருக்கும், யாழ். போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூட பரிசோதனையில், வவுனியா விமானப் படை முகாமை சேர்ந்த விமானப் படையினர் 6 பேருக்கும், யாழ். போதனா வைத்திய சாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.