இலங்கைக்கான சீன தூதரர் கீ சென்ஹொங் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதையடுத்து, பருத்தித்துறை முனைப் பகுதியை சீன தூதுவர் பார்வையிட்டார்.
இதன்போது, சீனத்தூதர் இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூரம் என அங்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவரை வினவினார், அதற்கு அவர், இந்து சமுத்திரம் இங்கிருந்து 30 கிலோ மீற்றர் எனப் பதிலளித்துள்ளார்.
மேலும், அப்பகுதியை நவீன ட்ரோன் கமெராக்கள் மூலம் காணொலிகளை பதிவு செய்திருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
சீன தூதுவர் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

