ஆயுதங்கள் கடத்தியதாக சந்தேகத்தின் பெயரில் கைதாகிய தமிழ் அரசியல் கைதி ஒருவர் 15 வருடங்களின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்
கோண்டாவிலைச் சேர்ந்த 45 வயதுடைய தேவராசா சிவபாலன் என்பவரே விடுதலையாகியுள்ளார்.
இவர் கடந்த 2006ஆம் ஆண்டு கொழும்பு வத்தளையில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.
அதன்பின், 2008ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் 14 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி இல்லையென தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்.
இவருடைய விடுதலைக்காக இவரது தாயார் குரல்கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.