திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைதான மிதப்பு பால உரிமையாளர் உள்ளிட்டோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம், கடந்த 10 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு எரிவாயுவை மாத்திரமே விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் வாக்குறுதி