இரத்தினபுரியில் நீர் தாங்கியில் விழுந்து ஒன்றரை வருட குழந்தையொன்று பலியாகியுள்ளது.
இரத்தினபுரி மஹவலவத்த பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய ரிஸ்வின் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் அருகிலுள்ள நாலு அடி நீளம், அகலம் கொண்ட நீர்த்தாங்கியில் நீர் நிரம்பி இருந்ததாகவும், தாயார் துணிகளை கழுவி அதனை காயவைக்க சென்ற சமயம் குழந்தை நீர்த்தாங்கியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை துடித்துக் கொண்டிருப்பதை கண்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறிஞ்சாக்கேணி பாலம் விபத்து: கைது செய்யப்பட்ட மூவருக்கு பிணை!