
கிழக்கு மாகாண சிறந்த தொழில் முயற்சியாளர் விருதைப் பெற்றுள்ள ஜனாசுக்கிர்தன்!
கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது 2019 வழங்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது லீ மெலடியன் மண்டபத்தில் 15.01.2021 நடைபெற்றது.
தேசிய தொழில் முயற்சி அதிகாரசபையின் தலைவர் எச் . சி. எம். ஐயரெத்தின தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான விமலவீர திசாநாயக்க,அம்பாரை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மற்றும் பலரும் பங்குபற்றி சிறப்பித்தனர்.
2019 ஆம் ஆண்டுக்கான இந்த விருது வழங்கும் நிகழ்வில் துரைவந்தியமேடு கிராமத்தில் வசிக்கும் தொழில் முயற்சியாளர் சுந்தரம் ஜனா சுகிர்தான் கிழக்கு மாகாணத்திற்கான சிறந்த தொழில் முயற்சியாளர் விருதினைப் பெற்றார்.