தங்காலை – சீனிமோதர பகுதியில் வசித்து வந்த 54 வயதான அமெரிக்க பிரஜையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சீனிமோதர பகுதியில் இவர் வசித்த வீட்டின் தோட்டத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தில் தீக்காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த அமெரிக்க பிரஜைஇ 2008 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வசித்து வந்ததுடன் இலங்கை பிரஜாவுரிமையை பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.