

சவூதி அரசாங்கம் தப்லீக் ஜமாஅத் அமைப்பை தடை செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பாரதூரத்தன்மையை தற்போது விளங்கிக் கொண்டுள்ளதுடன் தவறுகளையும் திருத்திக் கொண்டுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப்பெறுவதற்கு பிரதான காரணியாக உள்ள தப்லீக் ஜமாஅத் அமைப்பை தடை செய்வது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.