கல்முனை நன்னடத்தை அலுவலகத்துக்கு செல்லும் வீதியின் அவலம்! RDA,RDD, MC.. கவனத்துக்கு….

கல்முனை நன்னடத்தை அலுவலகத்துக்கு செல்லும் வீதியின் அவலம்! RDA,RDD, MC.. கவனத்துக்கு….

கல்முனை நன்னடத்தை அலுவலகத்திற்குச் செல்வதற்கு ஒழுங்கான பாதை நிர்மானிக்கப்படாமல் உள்ளது.
கல்முனை, கல்முனை (வடக்கு) , சாய்ந்தமருது, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய கல்முனை நீதி நிர்வாகப் பிரிவுக்கான நன்னடத்தைக் காரியாலயமானது கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்முனை-01D பிரிவில் சுனாமி தொடர்மாடிக்கு அருகில் அமைக்கப்பட்டு கடந்த 2020 டிசெம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

இது கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர், பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு அரச நிறுவனமாகும். இருப்பினும் இந்த அலுவலகத்திற்குச் செல்வதற்கான பாதைகள் இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை. அத்துடன் அதற்குச் செல்லும் வழி சேறும் சகதியும், புதையும் மணலும் கொண்ட ஒற்றையடிப் பாதையாக காணப்படுகின்றது. இதனால் அதனை நாடிவரும் பொதுமக்களும் , அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். இதனை சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்கள் கருத்தில் கொண்டு விரைவாக இந்த வழியைப் முறையான பாதையாக நிர்மாணித்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *