நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனால் வலி. மேற்கு பிரதேச சபைக்கு வீதி விளக்குகள் வழங்கி வைக்கப்பட்டன.
அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ரூபா ஆறு இலட்சத்தினை ஒதுக்கி 210 வீதி விளக்குகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் இன்று வலி. மேற்கு பிரதேச சபையில் வைத்து வீதி விளக்குகளை கையளித்தார்.
