கடந்த ஓர் நாளில் 25 எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு வெடித்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 25 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துள்ளன.
கடந்த நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் இதுவரையான 45 நாட்களில் மாத்திரம் 752 எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவங்களில் 90 சதவீதமானவை எரிவாயு அடுப்புக்களில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது