இலங்கையில் மேலும் 395 பேர் பூரணமாக குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 395 பேர் பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 46 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 76 ஆயிரத்து 966  காணப்படுகின்றது.

இதற்கிடையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *