2022 இல் பல மாற்றங்கள் நிகழும்: ஆட்சியும் கவிழும்! ராஜித

2022 மார்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரதன்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் மார்ச்சில் ஆரம்பமாகின்றது. இலங்கை தொடர்பில் இம்முறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

சர்வதேசத்துடன் நல்லுறவை பேணவில்லை. மனித உரிமைகளைமீறும் 45 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.

2022 என்பது தீர்க்கமான வருடமாக அமையும். பல மாற்றங்கள் இடம்பெறும். ஆட்சி மாற்றம்கூட ஏற்படும் எனத் தெரிவித்தார்.

வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலையில் ராஜபக்சக்கள்! ஏரான் விக்ரமரத்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *