சஜித்தால் அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடிந்தாலும் ஆட்சிக்கு வரமுடியாது! ஜகத்குமார

சஜித் பிரேமதாசவால் தற்காலிகமாக அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும். ஆனால் அவரால் ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், நல்லாட்சியின்போது சஜித் பிரேமதாச பிரதித் தலைவராக இருந்தார். ஆனால் அவர்களால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் போனது.

எல்லா வழிகளிலும் நாட்டை குழப்பினர். இவ்வாறு செய்தவர்கள் இன்று இந்த அரசை விமர்சித்து, ஆட்சியைக் கோருவது வேடிக்கையானது.

கொரோனா பெருந்தொற்றால் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இதனை பயன்படுத்தி அரச எதிர்ப்பு அலையை உருவாக்கலாம்.

இது நிரந்தரமல்ல. நாம் மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கி முன்னேறுவோம் எனத் தெரிவித்தார்.

2022 இல் பல மாற்றங்கள் நிகழும்: ஆட்சியும் கவிழும்! ராஜித

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *