கல்முனை அம்பாறை பிராந்திய சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் 30வது வருடாந்த பொதுச்சபை கூட்டம் சமாசத் தலைவர் எஸ். லோகநாதனின் தலைமையில் இன்று (16) சமாச காரியாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் பிரதிநிதிகள், கல்முனை கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தின் தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிரேஸ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஆர்.இராமகிரிஸ்ணன், எஸ்.ரமேஸ்குமார், ஆர்.பவப்பிரகாசன், கே.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கடந்த கால செயற்பாடுகள், மற்றும் சென்ற வருட கணக்காய்வு அறிக்கை ஆராயப்பட்டதுடன் எதிவரும் வருடத்திற்கான வரவு செலவு திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
இதன்போது புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது. சமாசத்தை சிறந்த அமைப்பாக மாற்றியமைத்து எதிர்காலத்தில் வினைத்திறனுடன் சங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பாக அதிதிகளால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு தீர்மானங்கள் பல இதன்போது எடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 09 பணிப்பாளர்களை பொதுச்சபையினர் தெரிவுசெய்ததுடன் கல்முனை அம்பாறை பிராந்திய சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவராக எஸ். லோகநாதனும், உப தலைவராக ரீ.ரூபரனும், செயலாளராக என். மாணிக்க லட்சுமியும் பணிப்பாளர்களினால் தெரிவு செய்யப்பட்டனர்.