வண்ணாத்திவில்லு – கரைத்தீவு பகுதியில் மரை இறைச்சியுடன் நால்வர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரைத்தீவு பகுதியில் மரையை சட்டவிரோதமாக வேட்டையாடியுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நால்வரும் கரைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இதன்போது 80 கிலோ மரை இறைச்சி, கைப்பற்றபட்டுள்ளதுடன் இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் நாளை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.