வில்பத்து தேசிய பூங்கா – கலா ஓயா இடையில் தொங்கு பாலம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு

வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழை வாயிலுக்கும், கலா ஓயாவிற்கும் இடையில் தொங்கு பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லை, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க நாட்டினார்.

குறித்த நிகழ்வு நேற்று புதன்கிழமை (15) மாலை இடம்பெற்றது.

ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தின் அனுசரணையில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த பாலமானது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், வில்பத்து தேசிய பூங்காவிற்கு இலகுவாக செல்லக்கூடிய வகையிலும் குறித்த தொங்கு பாலம் அமையும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தின் திட்டப் பிரதிநிதி திருமதி கிறிஸ்டி ஆன் ஐன்பீல்ட், வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, வன ஜீவராசிகள் பிரதிப் பணிப்பாளர் மஞ்சுள அமரரத்ன, தோட்டக்கலை பிரதிப் பணிப்பாளர் சாந்தனி வில்சன் ஆகியோர் கலந்து கொண்டு அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுடன் இணைந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *