யாழ். சாவகச்சேரி நகர் பகுதியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன.
சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது, லைட்டர் வெடித்துள்ளது.
இதையடுத்து, அவரது மீசை தீயில் கருகியுள்ளது. இருந்த போதிலும் பெரியளவிலான அனர்த்தம் ஏற்படவில்லை.
அதேவேளை நேற்று மாலை சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு அருகில் முதியவர் ஒருவர் லைட்டர் மூலம் சுருட்டை பற்ற வைக்க முனைந்த போதிலும் லைட்டர் வெடித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடிப்புக்கள் வெடிப்பு சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ள நிலையில், தற்போது சாவகச்சேரியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, நாட்டில் நேற்று மட்டும் 25 எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.