ஊழல் மோசடி குறித்து கதைக்கும் எரிவாயு நிறுவன தலைவரொருவர் பிரச்சினை வரும்போது தலைமறைவாவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எரிவாயு தொடர்பான பிரச்சினைகளுக்கு எரிவாயு நிறுவனங்களின் தலைவர்களும், அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும்.
ஊழல் மோசடி குறித்து கதைக்கும் எரிவாயு நிறுவன தலைவரொருவர் பிரச்சினை வரும்போது தலைமறைவாவதாகவும், அதற்காக ஜனாதிபதி அவருக்கு பதவி வழங்கவில்லை என தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்காமல் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.