கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, 2021 (2022) ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சுமார் ஒரு வருட காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பரீட்சைகளும் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டு பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

