சமந்தா பாடலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

அல்லு அர்­ஜுன் நடிப்­பில் தற்­போது உரு­வாகி இருக்­கும் புஷ்பா படத்­தில்
இடம்­பெ­றும் சமந்­தா­வின் கவர்ச்­சிப் பாட­லுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்­கி­றது.

அல்லு அர்­ஜுன் நடிப்­பில் பிரம்­மாண்­ட­மாக உரு­வாகி வரும் படம் ‘புஷ்பா’. சுகு­மார் இயக்­கும் இந்­தப் படத்­தில் சமந்தா ஒரு பாட­லுக்கு நட­ன­மா­டி­யுள்­ளார்.

இந்த ஒரு பாடலில் நடித்தமைக்கு மட்டும் சமந்தா சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

தெலுங்­கில் வெளி­யான இந்­தப் பாடல் தமி­ழி­லும் ‘ஓ சொல்­றியா மாமா.. ஓஓ சொல்­றியா மாமா’ என்­கிற வரி­க­ளைக் கொண்டு வெளி­யா­கி­யுள்­ளது.

இந்­தப் பாட­லில் இடம்­பெற்­றுள்ள வரி­கள், ஆண்­களை தரக்­கு­றை­வாக சித்­த­ரித்து எழு­தப்­பட்­ட­தாக கூறி அதனை தடை­செய்ய வேண்­டும் என ஆந்­திர நீதி­மன்­றத்­தில் ஆண்­கள் சங்­கம் சார்­பில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.

கபிலன் எழுதியுள்ள இந்தப் பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்.

மேலும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *