சீன நிறுவனத்திற்கு டொலர்களை வழங்க ஓர் வழியுண்டு. நட்டஈடு வழங்குவதற்கு ராஜபக்சக்களின் மெதமூலன காணியை விற்பனை செய்யலாம் எனவும் ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்இ
மக்களின் பணத்தில் சீனாவிற்கு நட்டஈடு வழங்கப்படக்கூடாது என ஜே.வி.பி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சீன சேதனப்பசளை நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட உள்ளதாகவும் அதற்கு பொதுமக்களின் பணம் பயன்படுத்தக்கூடாது என சமந்த வித்தியாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீன நிறுவனத்திற்கு டொலர்களை வழங்க ஓர் வழியுண்டு. நட்டஈடு வழங்குவதற்கு ராஜபக்சக்களின் மெதமூலன காணியை விற்பனை செய்யலாம்.
அத்துடன்இ அவர்களின் வயல்களை விற்பனை செய்யலாம்இ இல்லாவிட்டால் அவன்ட்கார்ட் நிறுவனத் தலைவர் நிசாங்க சேனாதிபதியிடம் பெற்றுக்கொள்ளலாம்.
அல்லாவிட்டால் பண்டாடோர பேப்பசர்ஸ் ஊழல் பட்டியலில் குறிப்பிடப்பட்ட நிரூபமா ராஜபக்சவிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நாட்டு அப்பாவி மக்களின் பணத்தில் சீன நிறுவனத்திற்கு நட்டஈடு செலுத்தக்கூடாது. நாடு மிகவும் துரதிஸ்டவசமான ஓர் நிலையை எட்டியுள்ளது.
நாட்டில் இத்தனை பிரச்சினை இருக்கின்ற நேரத்தில் ஏழு மூளைகளை உடையவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
பிள்ளைகள் பட்டினியில் இருக்கும் போது எந்தப் பெற்றோரும் வெளியே செல்ல மாட்டார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.