புதிய உரக் கலவையின் பயன்பாட்டால் சோளப்பயிர்ச் செய்கை வெற்றி

பொஸ்பேட் உரங்களின் மதிப்பை கூட்டி தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய உரக் கலவையைப் பயன்படுத்தியதனூடாக சோளப்பயிர்ச் செய்கை வெற்றியடைந்துள்ளது.

இதனை விவசாய அமைச்சில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் போது, பேராசிரியை நிர்மலா கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

மேலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் பெறுமதியை அதிகரிக்கும் வகையில் பொஸ்பேட், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கிய புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம் முன்வந்துள்ளது.

பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதற்கட்ட நடைமுறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை உரத்தைப் பயன்படுத்தி மரக்கறிகள் மற்றும் பிற பயிர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது வெற்றி அடைந்தால், இயற்கை விவசாயத்திற்குத் தேவையான அனைத்து கூறுகளையும் கொண்ட உயர்தர உரங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *