கழுத்தில் சுருக்கிட்டு நேரலையில் நண்பியை மிரட்டிய இளைஞன் சாவு

Silhouette depressed man want to commit suicide by hanging rope

யாழில் தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் ஒருவர் கழுத்தில் கயிறு இறுகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 31 வயதான வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன், யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், தான் தங்கியிருக்கும் அறையில் கூரை மரத்தில் கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் நண்பிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டியுள்ளார்.

எனினும் கதிரை சரிந்ததால் நிலை தடுமாறிய இளைஞனின் கழுத்தில் கயிறு இறுகியதால் அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்துள்ளார்.

இதன்போது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *