உலகத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்போகும் ஓமிக்ரோன் அதிர்ச்சி தகவல் ….!

ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், Omicron கொரோனா தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உலகின் பல பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. அதேபோல கொரோனா தடுப்பூசி பணிகளும் சிறப்பாக நடைபெற்று வந்ததால், விரைவில் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடான ஓமிக்ரோன் வைரச் மீண்டும் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை உலக சுகாதார நிறுவனம் ஆபத்தான கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.

Advertisement

ஓமிக்ரோன் கொரோனா : Omicron கொரோனா புதிய உருமாறிய கொரோனா என்பதால் உலகின் பல்வேறு ஆய்வாளர்களும் இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். முதற்கட்ட ஆய்வுகளில் இது டெல்டா கொரோனாவை காட்டிலும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரித்தானியாவில் ஓமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அங்கு முதல் உயிரிழப்பும் பதிவு செய்யப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

உலக சுகாதார நிற்வனம் எச்சரிக்கை : இந்நிலையில், ஓமிக்ரோன் வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) கூறுகையில், “இதுவரை 77 நாடுகளில் Omicron பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை நாம் பார்த்த உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரோன் வைரஸ் வேகமாகப் பரவுகிறது. இது லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்று மக்கள் நினைப்பது சரியான போக்கு இல்லை. Omicron லேசான பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதிக பேருக்குப் பரவும்போது நமது சுகாதார கட்டமைப்பில் கடும் அழுத்தம் ஏற்படக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.டிசம்பர் மாதம் இறுதி : இதேவேளை இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலஜி (Institute of Genomics and Integrative Biology) நிறுவனத்தின் ஆய்வாளர் டாக்டர் அனுராக் அகர்வால்(Anurag Agrawal) கூறுகையில், “ஓமிக்ரோன் கொரோனா தென்னாப்பிரிக்காவில் லேசான பாதிப்புகள் மட்டுமே ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவிலும் இதே நிலை இருக்க வேண்டும். ஆனால் லேசான பாதிப்பு கூட சுகாதார கட்டமைப்பைப் பாதிக்கக்கூடும். சிறப்பான முடிவுகளை நாம் எதிர்பார்க்கும் அதேநேரம் மிக மோசமான ஒன்றுக்கு நாம் தயாராக வேண்டும். டிசம்பர் இறுதிக்குள் Omicron குறித்துக் கூடுதல் தகவல்களை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் (Gita Gopinath) Omicron குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “ஓமிக்ரோன் வைரஸ் அடுத்த மாதம் அதிக ஆதிக்கம் செலுத்தும் கொரோனா வகையாக மாறும் ஆபத்து உள்ளது. அதேநேரம் இது டெல்டா கொரோனா உடன் ஒப்பிடுகையில் லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்துகிறது.

கொரோனா தடுப்பூசி முக்கியம் : ஓமிக்ரோன் வைரஸ் வேகமாகப் பரவினால் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். உலகில் உள்ள அனைவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து உருமாறிய கொரோனா தோன்றிக் கொண்டே தான் இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *