பிரியாணி தராமல் சாப்பிட்ட கணவனை கோடாரியால் கொத்திய மனைவி…..!

கேரளாவில் பிரியாணி தராமல் சாப்பிட்ட கணவனை கோடாரியால் கொத்தி மனைவி கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைச்சம்பவம் கேரள மாநிலத்தின் கோட்டயம் புதுப்பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை (14-12-2021) காலை இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் புதுப்பள்ளி பெரும்காவு பகுதியைச் சேர்ந்த சிஜி என்கிற மத்யூ ஆபிரகாம் என்ற 48 வயதான நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த கொலைச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மத்யூ ஆபிரகாம் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த போது தாராமல் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கோடாரியால் கொத்தி கொலை செய்து விட்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.பின்னர் வீட்டிற்கு வந்த மத்யூ ஆபிரகாமின் சகோதரரின் மனைவி சிஜி இரத்த வெள்ளத்தில் கிடத்தை அவனித்துள்ளார். பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மனைவியான ரோசன்னாவை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்களை அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் பொலிஸார் விசாரணையில் தெரிவித்தது, மத்யூ ஆபிரகாமும் ரோசன்னாவிற்கும் இடையே அண்மை நாட்களாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அது அருத்தல், ஒழுக்கக்கேடு, தனது குடும்பத்தை விட சகோதரரின் குடும்பத்தை சிஜி அதிகமாக கவனித்தமையே கொலைக்கான காரணங்கள் என கோட்டயம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து தொடர்ந்து 3 நாட்கள் வீட்டில் சமைக்கவில்லை. சம்பவ இடம்பெற்ற திகதி அன்று, சிஜி வெளியிலிருந்து பிரியாணி வாங்கி வந்திருந்தார். தனக்கு தராமல், சிஜியும், மகனும் பிரியாணியை சாப்பிட்டு விட்டு, மீதியை அருகிலுள்ள சகோதரன் வீட்டிற்கு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்துகோடாரியால் சிஜியின் தலையை கொத்தி கொலை செய்துள்ளதாக ரோசன்னா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மனைவி ரோசன்னாவிற்கு மனநல பிரச்சனைகளும் உள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *