மஹியங்கனை பாலத்திலிருந்து ஆணொருவரும் பெண்ணொருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர்.
எனினும் ஆற்றில் குதித்த நபர் நீந்தி கரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதனையடுத்து மஹியங்கனை பொலிஸார் அங்கு வந்து காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
காணாமல் போனவர் ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் நேற்று காலை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறி வீட்டிலிருந்து வந்துள்ளார்.
யுவதி ஆற்றில் குதித்ததாகவும், அதன் பின்னா் நபரும் ஆற்றில் குதித்ததாகவும் நேரில் கண்ட நபரொருவர் தெரிவித்துள்ளாா்.