இலங்கையில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட செயலமர்வொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வு, தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் அதன் மன்னார் மாவட்ட தொடர்பாடலுக்கான மையத்தின் (CCT) இணைப்பாளர் ஜோண்சன் தலைமையில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது
தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில், இலங்கை கெல்விட்டாஸ்க் அமைப்பின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையில் மாவட்ட ரீதியில் உள்ள மத தலைவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், அரச உத்தியோகஸ்தர்களை உள்ளடக்கி மேற்படி செயலமர்வு இடம் பெற்றது
பிரதேச ரீதியாக ஏற்படும் பிரிவினைகள் வன்முறை தீவரவாத செயற்பாடுகளை நோக்கி நகருவதை தடுக்கும் நோக்கிலும் பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் இயங்கி வரும் சர்வ மத குழுக்களில் தீவிரவாதத்திற்கு எதிரான செயல் திறன்களை மேம்படுத்தும் விதமாக குறித்த செயலமர்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது
குறித்த செயற்திட்டமானது, ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இலங்கையில் இன ரீதியான முரணாடுகள் அதிகம் காணப்படும் ஆறு மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டு அப் பகுதிகளில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது