சஹ்ரான் போன்றோருக்கு உதவிய அனைத்து அமைப்புக்களையும் தடை செய்ய வேண்டும் என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
சவூதி அரேபியாவில் இயங்கி வந்த தப்லிக் ஜமாத் மற்றும் தவா ஆகிய அமைப்புக்களை அந்நாட்டு இளவரசர் சல்மான் தடை செய்துள்ளார்.
இஸ்லாம் என்ற பெயரில் நாட்டுக்கு வரும் அனைத்து கடும் போக்குவாதங்களையும் வழிநடாத்துவது இந்த அமைப்புக்கள் என்பதனை நாம் பத்து ஆண்டுகளாக கூறி வந்தோம்.
ஜம்மயதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தீயே தப்லிக் ஜமாத் அமைப்பினதும் தலைவராவார்.
இந்த தப்லிக் ஜமாத் அமைப்பே பிரதான சூத்திரதாரி என நாம் அடையாளப்படுத்துகின்றோம். ஏனெனில், பிள்ளைகளை இவர்கள் பிழையாக வழிநடாத்துகின்றனர்.
வஹாப்வாதத்தை போசித்த சவூதி தனது பிழையை உணர்ந்து தப்லிக் ஜமாத் அமைப்பினை தடை செய்துள்ளது. சஹ்ரான் போன்றோருக்கு உதவிய அனைத்து அமைப்புக்களும் தடை செய்ய வேண்டும்.
சவூதி அரசாங்கத்தைப் போன்றே இலங்கையிலும் கடும்போக்குவாத அமைப்புக்கள் உடன் தடை செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்திடமும், பாதுகாப்பு தரப்பிடமும் கோருகின்றோம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இயங்கி வரும் கடும்போக்குவாத அமைப்புக்களை உடன் தடை செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.