இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க புதிய திட்டங்கள்..! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

எல்ல சுற்றுலா வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன் (வெள்ளிக்கிழமை) நடந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்

.சுற்றுலா அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியன இணைந்து 4 மாதங்களுக்குள் அதற்கான திட்டத்தை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ரம்மியமான இயற்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

முதற்கட்டமாக எல்ல சுற்றுலா வலயம் முறையான திட்டத்துடன் அபிவிருத்தி செய்து, அதன் பின்னர் ஊவா மாகாணம் முழுவதையும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

The post இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க புதிய திட்டங்கள்..! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை! appeared first on உதயன் | UTHAYAN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *