யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதியில் வெள்ளம் வழிந்தோட முடியாமல் தேங்கி காணப்பட்ட பொருட்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் துரித முயற்சியினால் குறித்த வாய்க்கால் பகுதி துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
துப்பரவு பணிகளின் போது அதிகளவான பிளாஸ்டிக் கழிவுகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தவிர கடந்த தடவையும் யாழ்ப்பாண நகரில் காணப்படும் பெருமளவான வடிகான்கள் துப்புரவு செய்யப்பட்டவேளை அதிகளவில் பிளாஸ்டிக் போத்தல்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.