வவுனியா – வாரிக்குட்டியூர் பகுதியில் பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் சிக்கி மாடு ஒன்றும், இரண்டு கன்றுகளும் இறந்துள்ளதுடன், அவை உடனடியாகவே இறைச்சிக்காக வெட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மாட்டு உரிமையாளரால் பூவரசன்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – வாரிக்குட்டியூர் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு சொந்தமான மாடு ஒன்றும், இரண்டு கன்றுகளும் வீட்டின் அயற்பகுதியில் பன்றிக் காவலுக்கு பிறிதொருவரால் வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி இறந்துள்ளன.
இவ்வாறு இறந்த மாடும், கன்றுகளும் உடனடியாக வெட்டப்பட்டு இறைச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மாட்டின் வெட்டப்பட்ட எச்சங்களே அப் பகுதியில் காணப்படுவதாக மாட்டு உரிமையாளரால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பில் வவுனியா, பூவரசங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.