‘இலங்கையில் மட்டும் தான் பல்கலைக்கழக மாணவர்கள் பகுதிநேர வேலையை விரும்புவதில்லை’ என கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.
இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் கலாசாரமன்றம் வெளியிடும் குறிஞ்சித்தமிழ் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மேலைநாடுகளில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் எல்லோரும் பகுதிநேர வேலை பார்க்கிறார்கள். வீட்டிலிருந்து எவ்வித வருவாயையும் எதிர்பார்ப்பதில்லை.
இலங்கையில் மட்டும் தான் பல்கலைக்கழக மாணவர்கள் பகுதிநேர வேலையை விரும்பாமல் பெற்றோரிடத்தில் தங்கியிருக்கின்றனர்.
ஒரு காலத்தில் இலங்கையில் ஒரு தமிழன் பட்டதாரியாக வேண்டுமென்றால் மதம் மாற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தற்போது அது மாற்றமடைந்து விட்டது என மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் தரித்து விடப்பட்டுள்ள 14 இந்திய இழுவை படகுகளை அகற்ற நடவடிக்கை! டக்ளஸ்